இந்தியா

தேர்வு அறையில் மாணவி மீது கழன்றுவிழுந்த மின்விசிறி - காயமடைந்த மாணவிக்கு முதலுதவி செய்த பள்ளி நிர்வாகம்!

ஆந்திராவில் தேர்வு எழுதி கொண்டிருந்த போது, மின்விசிறி கழன்று விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Selvi Selvakumar

ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் சோமந்தபள்ளி கிராமத்தில் உள்ள  விஞ்ஞான் பள்ளியில் நேற்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது.

அப்போது தேர்வு எழுதி கொண்டிருந்த மாணவி ஒருவரின் தலைக்குமேல் சுழன்று கொண்டிருந்த மின்விசிறி திடீரென்று கழன்று விழுந்தது. இதில், மின்விசிறியின் ஒரு இறக்கை, அந்த மாணவியின் முகத்தில் பட்டு காயம் ஏற்பட்டது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவிக்கு பள்ளியிலேயே முதலுதவி வழங்கினர். அதன்பின் தேர்வை முடித்து வீடு திரும்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.