இந்தியா

குஜராத் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார்?

புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Malaimurasu Seithigal TV

குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி, தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க அம்மாநில பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கென நேற்று வரை எம்எல்ஏக்களுடன் அவசர கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் இதன் இறுதி முடிவானது இன்று எட்டப்படும் என கூறப்படுகிறது. இதனிடையே எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களை தனித்தனியே சந்தித்து அவர்களது கருத்துக்களை பெற்று, முதல்வரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் குஜராத் விரைந்துள்ளனர்.