இந்தியா

நடிகை வித்யாபாலனை ‘முதல்வரின் இருக்கை’என குறிப்பிட்டு ஆம் ஆத்மி வீடியோ - காங்கிரஸ் கண்டனம்

Malaimurasu Seithigal TV

நடிகை வித்யாபாலனை ‘முதல்வரின் இருக்கை’ என குறிப்பிட்டு ஆம் ஆத்மி வெளியிட்ட வீடியோவிற்கு  காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸுக்கு அடுத்தபடியான இடத்தை தக்க வைத்து கொண்ட ஆம் ஆத்மி, நடப்பு தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதற்கென முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை மக்களிடமே அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் வழங்கியிருந்தார்.

இதனிடையே நேற்று பகவந்த் மானை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவித்த அவர், வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் மாநிலத்தின் முதல்வர் பதவியை பிடிக்க இருவேறு கட்சி தலைவர்கள் மோதிக்கொள்வது போன்றும், நடிகை வித்யாபாலனை முதல்வர் இருக்கை ஆக சித்தரித்தும் காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்தநிலையில் வித்யாபாலனை பொருளாக குறிப்பிட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ், அக்கட்சியில் ஒரு பெண் தலைவர் கூட இல்லாததற்கான காரணம் தற்போது வெளிப்பட்டுள்ளதாக டுவிட்டரில் விமர்சித்துள்ளது.