இந்தியா

மோடியை கருத்தை ஏற்கும் உலக தலைவர்கள்....உலகின் சிறந்த தலைவர் மோடி!!!

Malaimurasu Seithigal TV

உலகத் தலைவர்கள் மத்தியில் அதிகம் கேட்கப்படும் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான். எந்தவொரு உலகளாவிய முடிவிலும், உலகின் தலைசிறந்த தலைவர்கள் பெரும்பாலும் பிரதமர் மோடியின் கருத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.

இந்தியாவின் ஜி-20 தலைவர்களின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கூறியதாவது, ”உலகின் அனைத்து தலைவர்களிடமும் அதிகம் கேட்கப்படும் தலைவர் பிரதமர் நரேந்திர மோடி.  எந்தவொரு உலகளாவிய முடிவிலும், உலகின் தலைசிறந்த தலைவர்கள் பெரும்பாலும் பிரதமர் மோடியின் கருத்தை எடுத்துக்கொள்கிறார்கள்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “பருவநிலை மாற்றம் முதல் அரசியல், பொருளாதார பிரச்சினைகள் வரை பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக பேசப்படுகிறார்.  இன்று இந்தியாவானது குவாட், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் பிரிக்ஸ் போன்ற அமைப்புகளின் ஒரு பகுதியாக உள்ளது.” என்று ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.   தொடர்ந்து பேசிய ஷ்ரிங்கில்லா “ஜி-7 அமைப்பில் உறுப்பினராக இல்லாத போதும் அதன் ஒவ்வொரு மாநாட்டிலும் பிரதமர் மோடி அழைக்கப்படுகிறார்.  உலகின் தலைசிறந்த தலைவராக மோடி கருதப்படுவதே இதற்கான காரணம்” என ஷ்ரிங்கில்லா கூறியுள்ளார்.

-நப்பசலையார்