யோகா குரு பாபா ராம்தேவின், பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தால் பரிசாக வழங்கப்பட்ட கொரோனில் மருந்து விநியோகத்தை நேபாள அரசு நிறுத்தியுள்ளது.
பாபா ராம்தேவ் தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் கொரோனா-வுக்கு எதிராக கொரோனில் என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இதனை அண்டை நாடான நேபாளத்துக்கு பதஞ்சலி நிறுவனம் பரிசாக வழங்கியது. இதனை நேபாள அரசு கொரோனா நோயாளிகளுக்கு விநியோகம் செய்து வந்த நிலையில் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.
மேலும் பதஞ்சலி நிறுவனத்தால் பரிசாக வழங்கப்பட்ட மருந்துகள் கொரோனாவுக்கு எதிரான செயல்திறனை கொண்டிருக்கவில்லை என்றும், அதனால் கொரோனில் மருந்து விநியோகத்தை நிறுத்துவதாகவும் நேபாள அரசு அறிவித்துள்ளது. இருந்தபோதிலும் கொரோனிலுக்கு எதிராக முறையான தடை உத்தரவு இதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.