இந்தியா

2-வது முறையாக உத்தரப்பிரதேச முதலமைச்சராகிறார் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச சட்டமன்ற குழு தலைவராக யோகி ஆதித்யநாத் முறைப்படி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Suaif Arsath

நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாஜக வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது.

இந்நிலையில், லக்னோவில் பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மத்திய அமைச்சர் அமித்ஷா, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ரகுபர் தாஸ் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவராக யோகி ஆதித்யநாத் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், அவர் 2வது முறையாக முதலமைச்சராக பதவியேற்கவுள்ளார்.

லக்னோவில் அடல் பிஹாரி வாஜ்பாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், முதலமைச்சர் யோகி ஆதியநாத்தின் பதவியேற்பு விழா நாளை நடைபெறவுள்ளது. இந்த  விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதனையொட்டி, விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.