இந்தியா

முதல்வர் பதவியை தக்க வைப்பாரா யோகி? மோடியுடன் சந்திப்பு!

உத்தரபிரதேச அரசியலில் ஏற்பட்ட சலசலப்புக்கு பின், முதன்முறையாக பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திக்கவுள்ளார்.

Malaimurasu Seithigal TV

உத்தரபிரதேச அரசியலில் ஏற்பட்ட சலசலப்புக்கு பின், முதன்முறையாக பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திக்கவுள்ளார்.

கொரோனா காலக்கட்டத்தில், யோகி ஆதித்யநாத் அரசு முறையே செயல்படவில்லை என அவரது கட்சியை சேர்ந்த சிலர் விமர்சித்திருந்தனர். இந்த சூழலில் சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக, தேர்தலுக்கு முன்னதாக சில முக்கிய முடிவுகளையும் எடுத்து, மக்களின் செல்வாக்கை பெறவும் முயற்சித்துள்ளது. அண்மையில் காங்கிரஸிலிருந்து விலகி ஜிதின் பிரசாதா அக்கட்சியில் அடைக்கலமாகி இருப்பது அக்கட்சிக்கு கூடுதல் பலத்தை கொடுத்திருந்தாலும், முதல்வருக்கு எதிராக உள்ள சிலரையும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள யோகி ஆதித்யநாத், இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு, நாளை பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோருடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.