இந்தியா

விநாயகர் சிலை கரைப்பின்போது கலவரம்: ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சியினரிடையே மோதல்  

ஆந்திராவில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது.  

Malaimurasu Seithigal TV

ஆந்திராவில் விநாயகர் சிலை கரைப்பின்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலால் கலவரம் வெடித்தது.

நாடு முழுவதும் கடந்த 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் குண்டூர் மாவட்டம் கொப்பற்று கிராமத்தில் நேற்று இரவு விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களிடையே பயங்கர மோதல் ஏற்பட்டு இரு கட்சி தொண்டர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் 7 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் மோதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே,  தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சாரதா என்பவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் வீட்டு உபயோக பொருள்கள் உள்ளிட்ட 6 வாகனங்களுக்கு தீவைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.