மேகாலயாவில் கடைக்காரர்கள், தங்கள் தடுப்பூசி செலுத்திய விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை கடையின் முன் வைக்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. கொரோனாவை தடுக்க மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே தீர்வாக உள்ளது.
மேகாலயாவில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் வணிகத்தை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடைக்காரர்கள், விற்பனையாளர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், அதன் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் தடுப்பூசி விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை கடையின் முன் அல்லது வாகனத்தின் முன் வைக்க வேண்டும் என மேகாலயா உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.