தமிழ்நாடு

பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்....கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து....அதிர்ஷடவசமாக உயிர் தப்பிய 3 பேர்...!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் அதிர்ஷடவசமாக 3 பேர் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நூல் பண்டங்களை ஏற்றிக்கொண்டு  லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்தார். அவருடம் இரண்டு பேர் பயணித்துள்ளனர்.

லாரியானது வேடசந்துர் அருகே உள்ள காக்கா தோப்பு என்னும் இடத்தில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே கழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த 5 லட்சம் மதிப்பிலான நூல் பண்டகள் சாலையில் சிதறின. இதற்கிடையில் லாரியில் பயணம் செய்த ஓட்டுநர் சிவா மற்றும் உடன் பயணித்த இருவரும் அதிர்ஷடவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது ,சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர்.