tvk vs eps 
தமிழ்நாடு

2026 தேர்தல் - விஜய் தலைமையில் கூட்டணி அமைக்கும் அளவிற்கு இபிஎஸ் தரம் தாழ்ந்துவிட்டாரா!? - விட்டு விளாசிய டிடிவி.தினகரன்!!

மேலும் விஜய் -ன் அரசியல் பிரவேசம் உண்மையில் பிரதான கட்சியான திமுக மற்றும் அதிமுக -விற்கு ...

மாலை முரசு செய்தி குழு

தமிழ்நாட்டின் 2026 சட்டமன்ற தேர்தல் இதுவரை பார்க்காத மிக தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழக அரசியல் களம் தற்போது பல கோணங்களாக பிரிந்திருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக தனது  கூட்டணி கட்சிகளுடன் ஒரு பக்கமும் எதிர்க்கட்சியான அதிமுக - பாஜக கூட்டணி ஒரு பக்கமும் நிற்க, இதற்கு இடையில் தமிழக வெற்றி கழகம் நிற்கிறது. 

ஒருவேளை தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவினால் அதிமுக, திமுக, விசிக, காங்கிரஸ், நம் தமிழர், பாஜக என அனைவரின் ஓட்டையும் பாரபட்சமின்றி  விஜய் உடைப்பார் என்று சொல்லப்படுகிறது.

மேலும் விஜய் -ன் அரசியல் பிரவேசம் உண்மையில் பிரதான கட்சியான திமுக மற்றும் அதிமுக -விற்கு பெரும் பீதியை கிளப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, அதிமுக -பாஜக -விற்கு விஜய்யை தங்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் விஜய் தெளிவாக பாஜக, திமுக, அதிமுக என ஒருவரோடும் கூட்டணி வைக்கப்போவதில்லை என கூறியிருந்தார்.

சூழலை மாற்றிய கரூர் சோகம்!

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். எப்போதும் அவரை பார்க்க மக்கள் ஏராளமான அளவில் கூடுவது வழக்கம்.

ஆனால் கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர்.  மேலும் விஜய் பேசும்போது மைக் சரியாக வேலை செய்யாததால், பின்புறம் இருந்த கூட்டம் முழுவதும் முண்டியடித்துக்கொண்டு முன்னால் வந்து விட்டது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 41-பேர் உயிரிழந்துவிட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது.

தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்திய  இந்த கோர சம்பவத்திற்கு பிரதமர் உட்பட பல தலைவர்கள் நாடு முழுவதிலிருந்தும், பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த சூழலில் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த மாதிரியான சட்ட மற்றும் உளவியல் சிக்கல்கள் எல்லாம் விஜய் -க்கு புதிது. இந்த அமளிகளுக்கெல்லாம் இடையில் தான் விஜய் தேசிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.  இந்த கரூர் விவகாரம், அதிமுக -விற்கு குறிப்பாக எடப்பாடிக்கு ஒரு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 6 -ஆம் தேதி விஜய் -உடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி போனில் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது. அப்போது கரூர் துயரத்திற்கு ஆறுதல் தெரிவித்து இந்த விஷயத்தில் முழு ஆதரவு தர விரும்புவதாகவும் மேலும், கூட்டணி குறித்த விஷயங்களை பேச அழைப்பு விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.  அதற்கு விஜய் -ம் பொங்கல் கழித்து சொல்வதாக சொல்லியுள்ளாராம்.

இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்னர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, அங்கே தூக்கிப்பிடிக்கப்பட்ட தவெக கட்சிக்கொடியை கைகாட்டி, ‘பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது, யாரும் எதிர்பார்க்காத கூட்டணியாக இது அமையும்” என்று சொல்லியிருந்தார்.இவருடைய இந்த கருத்து தமிழக அரசியல் சூழலில் பெரும் அதிர்வலையை கிளப்பியுள்ளது. 

இந்நிலையில்தான்.. திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசுகையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் குறித்து தமிழ்நாடு முழுவதும் துரோகம் தலை விரித்து ஆடுகிறது என்றும், விஜய் தலைமையில் கூட்டணி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி  தயாராகி விட்டார் எனவும், அந்த அளவிற்கு அதிமுகவை தரம் தாழ்த்தி விட்டார் எனவும், குறிப்பாக அதிமுக கூட்டத்தில் தவெக கொடி அசைப்பதை பார்த்து எடப்பாடி பழனிசாமி பேசியது ஏமாற்றும் செயல் என்று தெரிவித்தார்.

அதிமுக பாஜக கூட்டணியில் இருந்து ஏன் வெளியேறினர் என்றும், பாஜகவிற்கு முக்கியமான தேர்தல் 2024 பாராளுமன்றத் தேர்தல் அப்போது எதற்காக எடப்பாடி பழனிசாமி கூட்டத்தை விட்டு வெளியேவிட்டு மீண்டும் தற்போது கூட்டணி வைத்துள்ளனர் எனவும், அவருக்கு துரோகத்தை தவிர எதுவும் செய்யத் தெரியாது என்று தெரிவித்தார்.

தற்போது அதிமுக கூட்டணி பலவீனம் அடைந்துள்ளது என்றும், அதனால் தான் தவேக தங்களோடு இருப்பதாக காட்டிக் கொள்கிறார் எனவும், ஒருவேளை தவெக கூட்டணி வந்தால் பாஜகவை கூட எடப்பாடி பழனிசாமி கழட்டிவிடுவார் என்றும், வருகின்ற தேர்தலில் அதிமுக 15 சதவீதத்திற்கும் கீழ் தான் வாக்கு பெரும் என்று தெரிவித்தார்.

எந்த ஒரு மாநிலமாக இருந்தாலும் மாநிலத்தின் உரிமையை காக்கும் விதமாக அவர்கள் விசாரணையை மேற்கொள்வார்கள் என்றும், மாநிலத்தில் உள்ள காவல்துறையினர் மீது மக்களுக்கு நம்பிக்கை சென்றுவிடும் என்பதால், மாநில அரசுகள் சிபிஐ விசாரணை கோரமாட்டார்கள் என்றும், தான் இவ்வாறு சொல்வதால் உடனடியாக திமுகவுடன் கூட்டணி வைக்க முயல்கிறார் என்று நினைக்க வேண்டாம் என்றும், அதிமுகவில் பொதுக்குழுவின் பயனாளிகளாகத்தான் உறுப்பினர்கள் உள்ளனர் என்று தெரிவித்தார்.

உண்மையான அதிமுக தொண்டர்கள் வெளியில் உள்ளனர் என்றும், இந்த தேர்தலில் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது டிடிவி தினகரன் பேட்டி என்று செய்தியாளர் சந்திப்பில் டிடிவி.தினகரன் பேட்டி அளித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.