புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 10 அரசு மதுபான கடைகளை இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் 11 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியின் போது குண்டடிப்பட்டு இறந்த விவகாரத்தில் இன்று அடக்கம் செய்யப்படும் நிலையில் நார்த்தாமலை, பசுமலைபட்டி, முத்துடையான்பட்டி, கீரனூர், வெள்ளனூர் ஆகிய பகுதிகளில் உள்ள 10 அரசு மதுபான கடைகளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.