தமிழ்நாடு

100% தடுப்பூசி செலுத்தி கொண்ட புதுக்குப்பம் பகுதி மீனவர்கள்...

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மீனவர் பகுதியான புதுக்குப்பம் பகுதியில் 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

Malaimurasu Seithigal TV

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மீனவர் பகுதியான புதுக்குப்பம் பகுதியில் 100% கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையத்தில் இன்று ஒரே நாளில் 500 நபர்கள் கொரோனா  தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். மரக்காணம் பேருந்து நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில்  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தடுப்பூசி செலுத்தும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதாக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டாட்சியர் அவர்கள் தலைமையில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 10 நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மரக்காணம் அடுத்துள்ள புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் 100% தடுப்பூசி செலுத்தி கொண்டார்கள்.