தமிழ்நாடு

விரைவில் 1000 ரூபாய்...!!!

Malaimurasu Seithigal TV

தமிழ்நாடு அரசு தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை அறிவிப்பு இடம்பெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், எல்லா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளதாக கூறினார்.  இதனிடையே தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பெண்களுக்கான ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்தார்.