தமிழ்நாடு

தஞ்சை தேர் திருவிழாவில் 11 பேர் உயிரிழப்பு.. விசாரிக்க தனிக்குழு - தமிழக அரசு

தஞ்சை தேர் திருவிழா குறித்து விசாரிக்க  ஒரு நபர் தலைமையில் விசாரணைக்குழு ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Suaif Arsath

தஞ்சை களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில், உயர் அழுத்த மின்கம்பி மீது தேர் சாய்ந்து மின் விபத்து ஏற்பட்டதில், 11  பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் வரக்கூடிய காலங்களில், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க ஐஏஎஸ் அதிகாரி குமார் ஜெயந்த்  தலைமையில் ஒரு நபர் விசாரணை குழு அமைத்திட முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.