தஞ்சாவூர் அடுத்த களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு வந்து மின்சார விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
முன்னதாக உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறவர்களை நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார். மேலும் மருத்துவர்கள் சந்தித்து காயமடைந்தவர்களின் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்தும் அமைச்சர் கேட்டறிந்தார்.