புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 111 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி கொரோனா பாதிப்பு:
புதுச்சேரியில் 104 நபர்களுக்கும், காரைக்காலில் 7 நபர்களுக்கும் என மொத்தம் 111 நபர்களுக்கு புதியதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆயிரத்து 135 நபர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 798 நபர்கள் குணமடைந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 68 ஆயிரத்து 896 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 963 ஆக உள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.