தமிழ்நாடு

12 - ஆம் வகுப்பு பொதுத்தேர்வு...! தேர்வுக்கட்டணம் குறித்த அறிவிப்பு...!

Malaimurasu Seithigal TV

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அடங்கிய பாடத்திற்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு பாடத்திற்கு 50 ரூபாய் எனவும் இதர கட்டணம் 35 ரூபாயும் செலுத்த வேண்டும் எனவும் சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் வழியில் பயிலாத மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை பெற வேண்டும் எனவும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், 06.01.2023 முதல் 20.01.2023 மாலை 5 மணிக்குள் மாணவர்களிடமிருந்து தேர்வு கட்டணத்தை பெற்று www.dge1.tn.gov.in தேர்வுகள் துறை இணையதளத்தில் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.