தமிழ்நாடு

மெரினா கடற்கரை - காணும் பொங்கலை ஒட்டி பாதுகாப்பு பணிக்கு 16 ஆயிரம் போலீசார் குவிப்பு..!

Malaimurasu Seithigal TV

காணும் பொங்கலை ஒட்டி கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெரினாவில் 16 ஆயிரம் போலீசர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பொங்கல் தொடர் விடுமுறையை ஒட்டி கடற்கரை, மால், திரையரங்கம், பூங்கா உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொழுது போக்கு தலங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம். இதனால் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், போலீசார் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். அந்த வகையில், கடலில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கடலுக்கு செல்லாத வகையில் கட்டைகளைக் கொண்டு தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். மேலும், ஆங்காங்கே பாதுகாப்பு கூண்டுகள் அமைத்து பொதுமக்கள் கடலில் இறங்காத வகையில் கண்காணித்து வருகின்றனர். மேலும், கடலில் படகு மூலம் ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  போலீசாரின் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள பொதுமக்கள் அரசுக்கும், காவல் துறைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.