தமிழ்நாடு

எல்லாரும் ஊருக்கு கிளம்ப தயாரா? விட்டாச்சு ஸ்பெஷல் பஸ்!

Tamil Selvi Selvakumar

தீபாவளிக்கென 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக  போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.  

பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் சிரமமில்லாமல் பயணம் செய்யும் வகையில் போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அந்தவகையில் நடப்பாண்டு கூடுதலாக எத்தனை சிறப்பு பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்து முக்கிய அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளுடன்  தலைமை செயலகத்தில் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது கூடுதலாக 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகளை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.