தமிழ்நாடு

தமிழக அரசின் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்திய பணிக்கு மாற்றம்...!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழக அரசின் தொழில் துறை செயலாளராக உள்ள மூத்த ஐ ஏ எஸ் அதிகாரி கிருஷ்ணன் ஐஏஎஸ் மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவராக உள்ள நீரஜ் மிட்டல் ஐஏஎஸ் , மத்திய தொலைத் தொடர்பு துறையின் செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாடு ஜனவரி மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தொழில்துறை செயலாளரான கிருஷ்ணன் ஐஏஎஸ் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து  இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய பணிக்கு விடுவித்து தமிழக அரசு விரைவில் அரசாணை பிறப்பிக்க உள்ளது. மேலும் புதிய தொழில் துறை செயலாளர் நியமனம் தொடர்பாகவும் தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.