தமிழ்நாடு

கொடநாடு வழக்கை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் பணியிட மாற்றம்...!

Tamil Selvi Selvakumar

கொடநாடு வழக்கினை விசாரித்து வந்த 2 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்து வந்த உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகன் மற்றும் உதகை மகிளா நீதிமன்ற நீதிபதி நாராயணன் ஆகிய இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து 26 நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதி மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கினை விசாரித்து வந்த நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நீதிபதி முருகன் சேலம் தொழிலாளர் நல கோர்ட்டிற்கும், நாராயணன் புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதியாகவும் பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உதகை மாவட்ட அமர்வு நீதிபதியாக எ.அப்துல் காதர் புதிதாக பொறுப்பேற்க உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.