தமிழ்நாடு

லாரி மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

Tamil Selvi Selvakumar

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று ஜனப்பன்சத்திரம் அருகே பழுதாகி நின்றுள்ளது. அப்போது பின்னால் கம்பி ஏற்றி வந்து கொண்டிருந்த மற்றொரு லாரி, பழுதாகி நின்ற லாரியின் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த உடல்களை மீட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.