தமிழ்நாடு

மாரடைப்பால் உயிரிழந்த கபடி வீரரின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

கபடி போட்டியில் பங்கேற்றபோது மாரடைப்பால் உயிரிழந்த வீரர் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கபடி வீரர் மாணிக்கம் கரூர் மாவட்டம் கணக்கப்பிள்ளையூரில் நடைபெற்ற கபடி போட்டியின்போது, திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலியால் உடனடியாக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார்.

கபடி விளையாட்டின் போது நெஞ்சுவலியால் கபடி வீரர் உயிரிழந்த செய்தி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், கபடி வீரர் மாணிக்கம் உயிரிழந்த செய்தியினை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாகவும், மாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.