திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும் பணம், மாதம் 2 முறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, இந்த மாதம் கடந்த 8-ந் தேதி எண்ணப்பட்ட போது, ஒரு கோடியே 69 லட்சத்து 54 ஆயிரத்து 36 ரூபாயும், 2-ஆம் முறையாக நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியின்போது, 70 லட்சத்து 47 ஆயிரத்து 46 ரூபாய் உண்டியலில் இருந்தது தெரிய வந்தது. 2 முறையும் சேர்த்து மொத்தம், 2 கோடியே 40 லட்சத்து ஆயிரத்து 82 ரூபாய் கிடைத்துள்ளது. தங்கம் 2 கிலோ 435 கிராமும், வெள்ளி 15 கிலோ 960 கிராமும் கிடைத்தது. மேலும் வெளிநாட்டு நோட்டுகள் 359 கிடைத்துள்ளது.