தமிழ்நாடு

பரபரப்பாக தயாராகி வரும் ஜி 20 மாநாடு... 20 நாடு பயணிகளுக்கு விமான நிலையத்தில் தனி பாதை...

நாளை தொடங்கும் ஜி 20 மாநாட்டிற்காக சுமார் 20 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக விமான நிலையத்தில் தனி பாதை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

Malaimurasu Seithigal TV

ஜி 20 நாடுகளின் மாநாட்டு தலைவராக பிரதமர் மோடி பதவி ஏற்றதை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் ஜி20 மாநாட்டு கூட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னையில் தாஜ் கோரமண்டல், கன்னிமாரா உள்ளிட்ட நட்சத்திர விடுதிகளிலும் தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி மையத்திலும் வருகிற ஜனவரி 31 (நாளை) முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை நடக்க இருக்கும் ஜி20 மாநாட்டில் சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதையடுத்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு, உள்நாட்டு முனையங்களில் ஜி 20 மாநாட்டிற்கு வருபவர்களை வரவேற்க தனி பாதை அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் பாதை மலர்கள் முலம் வரவேற்பு, வருகை பகுதியில் வெல்கம் டூ சென்னை என செல்பி புகைப்பட பகுதி, குடியுரிமை, சுங்க பகுதிகள் என சிறப்பு கவுண்டர்கள், இந்திய, தமிழக கலாச்சார ஒவியங்கள் என வைக்கப்பட்டு உள்ளது.