தமிழ்நாடு

”மருத்துவ வசதி இல்லாத 20 கிராமங்கள் - சிகிச்சையின்றி தவிக்கும் மக்கள்”

Tamil Selvi Selvakumar

தருமபுரி மாவட்டம், கடத்தூரை அடுத்த நாளநத்தம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மருத்துவ வசதி இல்லாத கிராமங்கள்:

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த தாளநத்தம்,கேத்துரெட்டிப்பட்டி, ஆகிய இரண்டு ஊராட்சிகளில் அய்யம்பட்டி, காவேரி புரம், நொச்சி குட்டை, வேப்பிலை பட்டி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன.இதில்,10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால், இங்குள்ள கர்ப்பிணி பெண்கள், தங்களுக்கான மருத்துவ சிகிச்சை பெற பொம்மிடி, இராமியம்பட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும்.

அப்படி ஒருவேளை செல்வதாக இருந்தாலும் அக்கிராம பகுதியில் இருந்து சுமார், 13 கி.மீ வரை செல்ல வேண்டும், அதற்கும் சரியான போக்குவரத்து வசதி இல்லை. இதனால் கர்ப்பிணிபெண்கள், முதியவர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து,  கடந்த தேர்தலின் போது திமுக, அப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படுமென வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது அந்த வாக்குறுதியை அவர்கள் கை கழுவி விட்டதால் மருத்துவ சிகிச்சைக்கு இப்பகுதி மக்கள் அலையும் அவலம் தொடர்ந்து வருகிறது என பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.