தமிழ்நாடு

பொருளாதாரத்தை உயர்த்தவே 2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறது - ஜி.கே.வாசன்

Malaimurasu Seithigal TV

பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான உயர்ந்த அறிவிப்பு 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவிக்கப்பட்டதற்கு ஜி கே வாசன் கருத்து.


தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரியும், கள்ள சாராய பேர்வழிகளை கடுமையாக தண்டிக்க கோரியும் மாபெரும் கையெழுத்து இயக்க நிகழ்ச்சியை தமிழ்மாநில காங்கிரஸ் ஜி கே வாசன்  துவக்கி வைத்தார்.இதில் ஏராளமான தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும்,நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

போதை பொருட்களுக்கு மதுவுக்கு தமிழ்நாட்டில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைப்பதோடு மட்டும் அல்லாமல் பொது மக்களிடமும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கையெழுத்து இயக்ககம் தொடங்கப்பட்டுள்ளது....ஒரு மாத காலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இடங்களிலும் இந்த கையெழுத்து இயக்கம் மூலம் மக்களிடம் கையெழுத்துப் பெற பட இருக்கிறது.

மக்கள் அரசு என்றால் இதற்க்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்...10 லட்சத்திற்கும் மேல் கையெழுத்திட்டு அந்தந்த பகுதிகளில் ஆட்சியாளர்களிடம் வழங்குவார்கள்.அரசின் மெத்தன போக்கே கள்ளசயரம் அருந்தி 20 பேர் இறந்ததற்கு காரணம்.பொருளாதாரத்தை உயர்த்த கூடிய உயர்ந்த அறிவிப்பு தான் 2000 ரூபாய் திரும்ப பெறுவதாக அறிவித்தது