தமிழ்நாடு

MBBS, BDS படிப்புகளுக்கு 2ம் சுற்று கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!

Tamil Selvi Selvakumar

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு 2-ம் சுற்று கலந்தாய்வு வரும் 21ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, இரண்டாம் சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தரவரிசை பட்டியல் 1 முதல் 25 ஆயிரத்து 856 பெற்ற மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு பிரிவிற்கு தரவரிசை பட்டியல் 1 முதல் 13 ஆயிரதது 179 பெற்ற மாணவர்களும் வரும் 21, 22 ஆகிய தேதிகளில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதைத்தொடர்ந்து வரும் 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யலாம் என்றும், இறுதி ஒதுக்கீடு வரும் 31ம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.