தமிழ்நாடு

தீரன் சின்னமலையின் 266வது பிறந்தநாள் விழா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Suaif Arsath

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 266-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை கிண்டியில் உள்ள திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு  தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் அருகே அமைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இதனைதொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோரும் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.