தமிழ்நாடு

கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்... எந்த காலேஜ் பா இது?

கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Suaif Arsath

கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி சமீபத்தில் அரசு கல்லூரியாக மாற்றப்பட்டது. மேலும் இந்த கல்லூரி கடலூர் அரசு மருத்துவ கல்லூரியாக செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்  கல்லூரியில் 2 மற்றும் 3ஆம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தனியார் கல்லூரிகளுக்கு நிகரான கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து ராஜா முத்தையா கல்லூரி முன்பு குவிந்த மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.