தமிழ்நாடு

ஈரோட்டில் 2-வது முறையாக 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி...குதுகலத்தில் பொதுமக்கள்!

Tamil Selvi Selvakumar

ஈரோட்டில் 2-வது முறையாக 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

வாரவிடுமுறையை ஒட்டி சென்னை, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை உற்சாகப்படுத்தும் வகையிலும், போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தும் வகையிலும் காவல்துறை சார்பில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதே போல், ஈரோட்டில் கடந்த வாரம் முதல் முறையாக  'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று, இரண்டாவது வாரமாக 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அப்போது ஆடல், பாடல் என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுமட்டுமல்லாமல், நிகழ்ச்சியில் சிலம்பம் சுற்றுதல், தற்காப்பு கலைகள், சைக்கிள் சாகசம் என தனித்திறமைகளை இளைஞர்கள் வெளிப்படுத்தினர். கோலாகமலாக நடைபெற்ற இந்த  'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சுமார், மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றதால் இந்த நிகழ்ச்சியில் உற்சாகம் கரைபுரண்டது.