தமிழ்நாடு

புகார் அளிப்பதற்காக தலைமைச் செயலகம் வந்த 3 பேர்...குண்டுகட்டாக அழைத்து சென்ற போலீஸ்...!

Tamil Selvi Selvakumar

அபகரிக்கப்பட்ட வீட்டை மீட்டுத் தரும்படி முதலமைச்சரிடம் புகார் அளிக்க வந்த 3 பேரை காவல் துறையினர் குண்டுகட்டாக அழைத்து சென்றதால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூரில் உள்ள அய்யனார் தெருவை சேர்ந்த லலிதா என்பவர் குடியிருந்து வந்த வீட்டை ஊராட்சி மன்ற தலைவரான குமரவேல் என்பவர் அபகரித்துவிட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.

இதுகுறித்து விசாரித்து அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், வீட்டை மீட்டுத் தருமாறும் வலியுறுத்தி ஹேமா உள்ளிட்ட 3 பேர் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் மனு அளிப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்துள்ளனர். 

ஆனால், அங்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருப்பதால் காவல் துறையினர் அவர்கள் 3 பேரையும் குண்டுகட்டாக அழைத்து சென்றுள்ளனர். இதனால் தலைமைச் செயலகத்தில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.