accident 
தமிழ்நாடு

“ரேஷன் பொருள் வாங்க போனவங்களுக்கு இப்படியா நடக்கணும்..” ஒரே விபத்தில் பலியான மூன்று பெண்கள்!!

ரேஷன் பொருட்கள் வாங்கி திரும்பும் போது டிராக்டர்....

Saleth stephi graph

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பொதிகுளம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு கூவர் கூட்டத்தை சேர்ந்த 11 பெண்கள், 2 ஆண்கள் ரேஷன் பொருட்கள் வாங்க டிராக்டரில் வந்திருந்தனர்.

ரேஷன் பொருட்கள் வாங்கி திரும்பும் போது டிராக்டர் சின்ன பொதிகுளம் கிராமம் அருகே கவிழ்ந்ததில் மூன்று பெண்கள் சம்பவ இடத்தில் பலியாகினர்.

பொன்னம்மாள்(60), ராக்கி (65), முனியம்மாள்(65) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்

காயம் பட்ட 8 பெண்கள், 2 ஆண் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

இது குறித்து இளஞ்சம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.