தமிழ்நாடு

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் கைது...!

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை இரணியல் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Malaimurasu Seithigal TV

கன்னியாகுமரி மாவட்டத்தில், சில தினங்களாக கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்களை போலீசார் கண்காணித்து, அவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று, இரணியல் அடுத்த பரசேரி பேருந்து நிறுத்தத்தில் இரணியல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றுகொண்டிருந்த பிரபீஷ், அஜித்ராஜ், மற்றும் சகாய கவின் என மூன்று இளைஞர்களிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அந்த மூவரும், கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மூன்று வாலிபர்களையும் கைது செய்த இரணியல் போலீசார், அவர்களிடம் இருந்து 8-கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததோடு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.