தமிழகத்தில் நியுமோகாக்கல் தடுப்பூசி போட தொடங்கப்பட்ட நாளிலிருந்து நேற்று வரையிலும் 42,567 குழந்தைகளுக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் நியூமோகோக்கல் தடுப்பூசி இலவசமாக போடும் திட்டத்தை கடந்த மாதம் 24 ஆம் தேதி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். இதன்படி, கடந்த ஜூலை மாதம் 24ஆம் தேதி முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேசிய காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 9 லட்சத்து 23 ஆயிரம் இருப்பதாவும் அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. மேலும் அப்போது தமிழக அரசின் கையிருப்பில் 70 ஆயிரம் நியூமோகாக்கல் தடுப்பூசி இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் நியூமோகாக்கல் தடுப்பூசி போட தொடங்கிய நாளில் இருந்து நேற்று வரை 42,567 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக்காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இதனால் ஆண்டுக்கு 12 லட்சம் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில் அதனை தடுக்க நியூமோகோக்கல் தடுப்பூசி 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நியூமோகாக்கல் தடுப்பூசி போடப்பட்ட வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது