2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் நாள் ( ஏப்ரல் 23) அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் திருவிழா தொடங்கியது. அதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் சென்னையில் நடந்த நிகழ்வில் தேர்தலுக்கான வாக்குறுதிகளை வெளியிட்டு உரையாற்றியுள்ளார். மேலும் வாக்குறுதிகளை காணொளியாகவும் வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து 234 தொகுதிகளிலும் தனித்து நாம் தமிழர் கட்சி போட்டிடும் எனவும் குறிபிட்டுள்ளார்.
தற்போது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ள சீமான் “எங்கள் கனவு எங்கள் திருநாட்டில் எங்கள் நல்ஆட்சியே” என முழக்கமிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டில் நல்லாட்சி அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அதை நாம் தமிழர் முன்னெடுக்குமெனவும் தெரிவித்துள்ளார். “மாறுவோம் மாற்றுவோம்” என்று குறிப்பிட்டு ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் மேலும் வாக்குறுதி காணொளியை வெளியிட்டு “எங்கள் கனவு இப்போது உங்கள் கையில்”! எனவும் தெரிவித்துள்ளார்.
நாதக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு 5 தலைநகரங்கள் அறிவிக்கப்படும் எனவும், அதனை தொடர்ந்து மதுரை (கலை மற்றும் பண்பாட்டு தலைநகரம்) கன்னியாகுமரி (தமிழ் மொழியியல் தலைநகரம்), சென்னை (தொழில் நுட்ப தலைநகரம்), திருச்சி (நிர்வாக தலைநகரம்) மற்றும் கோவை (வணிக தலைநகரம்) ஆகிய தலைநகர மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாதக ஆட்சியில் மாணவர்களின் கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார். நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் அடிப்படை தேவையான குடிநீரை காசுக்கு விற்பதை தடை செய்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றம் மற்றும் , நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு தனி தொகுதி வழங்கப்படும் என்றும் ஜனாதிபதியை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் “குடியரசு தலைவரை மக்களே தேர்வு செய்ய அரசியலமைப்பை திருந்த வேண்டும்” எனவும் பேசியிருந்தார்.
தற்போதுள்ள இட பங்கீட்டு முறை மாற்றி அமைக்கப்படும் என்றும் அதில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
“தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்படும்” எனவும் “வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் அஞ்சல் வழியில் வாக்களிக்கும் உரிமையை பெற்றுத் தருவோம் என வாக்குறுதி அளித்துள்ளார்.
60 வயதிற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் , ஆற்றுநீர் பயன்படுத்தும் ஆலைகளுக்கு தடை விதிக்கப்படும் , ஆங்கில மருத்துவம் தமிழ் வழியில் நடத்தப்படும் மற்றும் பாரதிதாசனின் ‘வாழ்வினில் செம்மை’ பாடலே தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றப்படும் எனவும் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
மேலும் ”தமிழ்நாட்டில் தலைநகரத்திலே பயணிக்க பாதை இல்லை இதைப்பற்றி பேசி பயனில்லை” என்று ஆளும் அரசை விமர்சித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.