தமிழ்நாடு

5 நாள் தொடர் விடுமுறை: 2வது நாளாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Tamil Selvi Selvakumar

தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்கு 2வது நாளாக இன்றும் 2 ஆயிரத்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

தொடர் விடுமுறை:

காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு 5 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் நெரிசலின்றி பயணிக்கும் வகையில், 2 நாட்கள் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்:

அதன்படி, நேற்று சென்னையிலிருந்து 2 ஆயிரத்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், அதே அளவிலான பேருந்துகள் இன்றும் இயக்கப்படுகின்றன. இதேபோல பிற ஊர்களில் இருந்தும் ஆயிரத்து 650 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், தேவைக்கேற்ப தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, வழக்கமாக  விழாக்காலங்களில் இயக்கப்படுவதுபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து செல்லும் சில பேருந்துகள், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய பகுதிகளில் இருந்து இயக்கப்படுகின்றன.