தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வில் நிறைய இடங்கள் நிரம்பவில்லை...சேர்க்கைக் குழு தகவல்!

Tamil Selvi Selvakumar

தமிழ்நாட்டில் 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறியியல் படிப்பு இடங்கள் காலியாக உள்ளதாக பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 442 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 60 ஆயிரம் இளநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 22 ஆம் தேதி செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெற்றது. 

இந்த கலந்தாய்வு முடிவில் ஒரு லட்சத்து மூவாயிரம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 57 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.