1964 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் தேதி நள்ளிரவில் வீசிய கடும் புயல் மற்றும் ராட்சத அலை காரணமாக தனுஷ்கோடி என்ற மிகப் பெரிய நகரம் தரைமட்டமானது மேலும் ஆழிப் பேரளையில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.
மேலும் படிக்க | ரேசன் அரசியை எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் சாப்பிடுவார்களா?
உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தனுஷ்கோடி தெற்கு கடலில் தனுஷ்கோடி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர் மறுவாழ்வு சங்கம், தனுஷ்கோடி பாரம்பரிய மீனவர் நலச்சங்கம், தனுஷ்கோடியின் பூர்வீக யாத்திரை பணியாளர் சங்கம் மற்றும் பகுதி மீனவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோர புயலில் உயிர் நீர்த்தவர்களுக்கு கடலில் மலர் அஞ்சலி செலுத்தினர்