தமிழ்நாடு

கோவையில் 6000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு...! விரைவில் நடவடிக்கை...!! 

Malaimurasu Seithigal TV

கோயம்புத்தூர் பகுதிகளில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட 6000 ஏக்கர் நிலம் நிலம் விரைவில் மீட்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் கைத்தறி துணி நூல் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று சட்டப் பேரவையில் நடைபெற்றது. அப்போது சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் கோயம்புத்தூர் பகுதிகளில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட 6000 ஏக்கர் நிலம் நிலம் விரைவில் மீட்கப்படும் என வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

முன்னதாக இதுகுறித்து கேள்வி எழுப்பிய சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், "கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள 12 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய  7000 ஏக்கர் நிலங்கள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமாக உள்ளது. ஆனால் 500 ஏக்கர் நிலத்தில் மட்டுமே வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6000 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிள்ளது. இது குறித்த நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்றார்.

இதற்கு பதிலளித்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி " கோவை மாவட்டத்தில் 6000 ஏக்கருக்கு மேல் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் இருக்கிறது. ஆனால் தற்போது அதனை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இவற்றை ஒழுங்குமுறை செய்வதற்கு  தனிக் குழு அமைக்கப் பட்டுள்ளது. அந்த குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் இந்த நிலங்கள் மீதான ஆக்கிரமிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்"  என தெரிவித்துள்ளார்.