நாட்டின் எந்த ஒரு பகுதியையும் குறிப்பிட்டு இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்ற சொல்லவே முடியாது. இந்த தேசத்தின் மிகப்பெரும் அவலம். அதை சமூகம் இம்மியளவு கூட உணர்ந்ததாக தெரியவில்லை. அதன் நீட்சிதான் தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம், வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது.
அதிலும் தற்போதெல்லாம் வயது வித்தியாசமே இல்லாமல் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகின்றனர். இது முழுக்க ஆண்களின் விக்கிர மன நிலையியே காண்பிக்கிறது. மீண்டும் ஒரு கோர சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
பாபநாசம் அருகே 65 வயது மூதாட்டியை கற்பழித்த 45 வயதுடைய காமக்கொடூரன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா உள்ளிக்கடை கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசித்து வரும் வைரக்கண்ணு மனைவி பக்கிரியம்மாள்(65). இவர் கணவர் இறந்துவிட்டார். இவருடைய ஒரே மகன் திருப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மருமகள் சுகந்தி தனது தாய் வீட்டிற்கு நான்கு நாட்களுக்கு முன்பு சென்று விட்டார். பக்கிரியம்மாள் தனது வீட்டிலிருந்து அய்யம்பேட்டை பகுதிக்கு நடந்து சென்று கூலி வேலை செய்துவிட்டு மீண்டும் நடந்தே வீட்டிற்கு வருவது வழக்கம்.
வழக்கம் போல பக்கிரியம்மாள் குறுக்கணை உள்ளிக்கடை ரோடு பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே வழியாக குடிபோதையில் வந்த உள்ளிக்கடை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மும்மூர்த்தி (46) என்ற நபர் மூதாட்டி பக்கிரியம்மாளை தாக்கி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி பக்கிரி அம்மாள் வீட்டிற்கு சென்று தகவல் கூறவே அவரது மருமகள் சுகந்தி அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். இது குறித்து அய்யம்பேட்டை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து இந்த மோசமான செயலில் ஈடுபட்ட காமக்கொடூரன் மும்மூர்த்தியை கைது செய்து தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி மும்மூர்த்தியை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.