தமிழ்நாடு

தமிழகத்தில் 69.2% பேருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி.! ஐ.சி.எம்.ஆர் தகவல்.!  

Malaimurasu Seithigal TV

தமிழகத்தில் 69.2 சதவிகிதம் நபர்களுக்கு கொரோனோவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டு இருப்பதாக ஒன்றிய அரசின் ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனோவுக்கு எதிராக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை கண்டறிய ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியும் செரோ சர்வே  அண்மையில் ஐ சி எம் ஆர் சார்பில் 4வது கட்ட ஆய்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இந்தியாவில் 70 மாவட்டங்களில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டது. 

இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 79 சதவீதத்தினக்கும் , குறைந்தபட்சமாக கேரளாவில் 44.4 சதவீதத்தினருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் 69.2 சதவிதம் பேர் கொரோனோ எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக ஐ சி எம் ஆர் தகவல் தெரிவித்துள்ளது.