தமிழ்நாடு

துபாயில் இருந்து மதுரை வந்த பயணியிடம் பறிமுதல் செய்யப்பட்ட 697 கிராம் தங்கம்..!

Malaimurasu Seithigal TV

துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை 8:20 மணி அளவில் துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் 160 பயணிகள் வந்தனர். இதில் பயணம் செய்த தஞ்சாவூர் மாவட்டம்  திருவிடைமருதூர் தாலுகா, திருபுவனம் பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் அவினாஷ் என்ற பயணி வந்துள்ளார். அவரிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட 348 கிராம் எடையுள்ள நிக்கல் பிளேட் கோட்டிங்குடன் கூடிய வட்டவடிவிலான தங்க பொருளும். இதேபோல் 349 கிராம் எடையுள்ள அலுமினிய காப்பு போல் உள்ள தங்க பொருளும் சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 35 லட்சத்து 21 ஆயிரத்து 244 ரூபாய் மதிப்புள்ள 697 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது. மேலும் இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் அவினாஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.