தமிழ்நாடு

சோழர் காலத்து 7 சிலைகளும், 2 ஓவியங்களும் பறிமுதல்!

கண்கவரும் சோழர்காலத்து 7 வெண்கல சிலைகள் மற்றும், 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Malaimurasu Seithigal TV

தொன்மை வாய்ந்த 7 சோழர்கால வெண்கல சிலைகள், 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 2 பழங்கால தஞ்சை ஓவியங்களையும் ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் கடந்த 2011 ஆம் ஆண்டு அவரது வீட்டில் வைத்துவிட்டு, வெளிநாட்டில் வசித்து வருவதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வெளிநாட்டு வாழ் இந்தியரிடம் மேற்கொண்ட விசாரணையில், சிலைகளை தனது பெற்றோர் வைத்திருந்ததாகவும், அதுகுறித்த விவரங்கள் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

பழங்கால சிலைகள் வைத்திருப்பது சட்டவிரோதம் என்பதால் உரிய ஆவணங்கள் இல்லாத பழங்கால 7 சோழர்கால வெண்கல சிலைகள் மற்றும் 2 பழங்கால தஞ்சை ஓவியங்கள் ஆகியவற்றை சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளது.

சிலைகளின் தொன்மை குறித்து தொல்லியல் துறையினர் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சிலைகள் எந்த கோவிலைச் சேர்ந்தது என்பது குறித்தும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிலைகளை வைத்திருந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் அமெரிக்காவில் இருப்பதால் அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.