காவல்துறை அதிகாரிகள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 7 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாநில குற்ற ஆவண காப்பக போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், சென்னை தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும், சென்னை தலைமையக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன், சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழை....!!!
மேலும் சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆரோக்கியம், சென்னை பெருநகர மத்திய குற்றப்பிரிவு-3-ன் துணை கமிஷனராகவும், சென்னை மத்திய குற்றப்பிரிவு 1-ன் துணை கமிஷனராக ஸ்டாலின் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.