தமிழ்நாடு

70ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா - கனிமொழி தொடங்கி வைப்பு !

Tamil Selvi Selvakumar

தருவைக்குளம் அருகே 70ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உரக்கிடங்கு பகுதியினை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டது. அதன்படி முதலமைச்சர் பிறந்த நாள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு மரம் நடும் விழாவைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்  கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன், மாணவ, மாணவியர், தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்.