madras high court 
தமிழ்நாடு

76 ஆயிரம் ‘பிடிவாரண்டுகள்’ நிலுவையில் உள்ளது..! சென்னை உயர்நீதிமன்றம் பகீர் தகவல்!!

மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 2 வழக்குகள் 'பிடிவாரண்டு' அமல்படுத்தாத ஒரே காரணத்துக்காக..

Saleth stephi graph

தமிழ்நாட்டில் 74 ஆயிரம் வழக்குகளில் 'பிடி வாரண்டு'கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், இது நீதி வழங்கும் எந்திரத்தின் செயல்பாட்டை பலவீனப்படுத்தும் என்றும்  சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்து உள்ளது.

‘பிடிவாரண்ட்’

குற்ற வழக்குகளில் கைதானவர்கள் ஜாமீனில் வெளியே வந்தாலும், வழக்கு விசாரணைக்காக தொடர்ந்து கோர்ட்டில் ஆஜராக வேண்டும். ஆனால் சிலர் தலைமறைவாகி விடுவார்கள்.

அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கும் கோர்ட்டு சார்பில் 'பிடிவாரண்டு' பிறப்பிக்கப்படுவது வழக்கம்.இதற்கிடையே குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு ஆஜர் ஆகாததால் அவர்களுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட ‘பிடிவா ரண்டை'அமல்படுத்த போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று பல வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில்தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி பி.வேல்முருகன் விசாரித்தார்.

இதுபோன்ற எத்தனையோ வழக்குகள் இந்த ஐகோர்ட்டில் தினமும் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துவிட்டோம். அதை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுதான் விசாரணைக்கு எடுக்கவில்லை. கோர்ட்டு பிறப்பிக்கும் பிடி வாரண்டை உடனுக்குடன் அமல்படுத்துகிறோம் என காவல்துறை சொன்னாலும், தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்பதுதான் உண்மை.

அதிர்ச்சி அளிக்கும்  தகவல் 

மாநிலம் முழுவதும் 73 ஆயிரத்து 699 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 2 வழக்குகள் 'பிடிவாரண்டு' அமல்படுத்தாத ஒரே காரணத்துக்காக 1985-ம் ஆண்டு முதல் விசாரிக்கப்படாமல் உள்ளன. 12 ஆயிரத்து 394 வழக்குகள் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை 7 மாதங்களில் 'பிடிவாரண்டு'கள் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளவை.

1985-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை 61 ஆயிரத்து 305 வழக்குகளில் ''பிடிவாரண்டு' நிலுவையில் உள்ளன. இந்த தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை அளிக்கிறது. இது காவல்துறையின் பொறுப்பின்மையை அப்பட்டமாக காட்டுகிறது. இது, நீதி பரிபாலன எந்திரத்தின் செயல்பாட்டை பலவீனப்படுத்தும் என உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டும் சம்பந்தப்பட்ட அந்த குற்றவாளிகள் கைது செய்யப்படாவிட்டால், அவர்களை தலை மறைவு குற்றவாளி என அறிவித்து, அவர்களது சொத்துகளை முடக்குவது உள்ளிட்ட சட்டப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்தப்பிடிவாரண்டுகளை செயல்படுத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள், ஐகோர்ட் சுற்றறிக்கைகள்  ஆகியவற்றை அமல்படுத்த ஆய்வு கோர்ட்டில் நிர்வாக அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்ற மகேஷ் பாபு என்பவரை நியமித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்