தமிழ்நாடு

நடந்து சென்ற மூதாட்டியிடம் 8 பவுன் நகை பறிப்பு...மர்மநபர்களுக்கு வலைவீச்சு....

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே தெருவில் நடந்து சென்ற மூதாட்டியிடம், மர்மநபர்கள் 8 பவுன் தங்க நகையை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Malaimurasu Seithigal TV

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த வி.ஐ.பி முதல் தெருவில் வசித்து வருபவர் ரம்யாதேவி. மூதாட்டியான இவர், மாட்டு கொட்டகைக்கு செல்வதற்காக தெருவில் நடந்து சென்றுள்ளார்.’

அப்போது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்மநபர்கள், மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு, அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்லியை பறித்துவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

 நொடி பொழுதில் நடந்த இந்த திருட்டு சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த மூதாட்டியான ரம்யாதேவி கூச்சலிட்டுள்ளார். அவரில் அலறல் சத்தம் கேட்டு ஒடி வந்தவர்கள், இது குறித்து காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் வந்த போலீசார், விசாரணை மேற்க்கொண்டு சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் வழிப்பறி கொள்ளையர்கள் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், பட்டபகலில் மூதாட்டியிடன் தங்கசங்கிலி பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.