தமிழ்நாடு

மாலை முரசு நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ராமச்சந்திர ஆதித்தனாரின் 89-வது பிறந்த நாள் கொண்டாட்டம்...!

Malaimurasu Seithigal TV

மாலை முரசு  நாளிதழ் நிர்வாக ஆசிரியர் இராமச்சந்திரா ஆதித்தனாரின் 89-வது பிறந்த நாளை முன்னிட்டு காயாமொழியில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.

மாலை முரசு  நாளிதழ் நிர்வாக ஆசிரியர் ராமச்சந்திர ஆதித்தனாரின் 89-வது பிறந்த நாளை முன்னிட்டு காயாமொழி மணிமண்டபத்தில் உள்ள அவரது முழு உருவ சிலைக்கு ஊர் பொதுமக்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனையடுத்து அவரது நினைவிடத்தில் மலர்  தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து தேசிய நாடார் சங்க பொதுச் செயலாளர். இன்ஜினியர் விஜயகுமார், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 மேலும் அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர் தொழிலதிபர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.